கற்றதும் பெற்றதும் தொடர் இன்று கையில் இடறி, சுஜாதா எழுதியிருந்த ஒரு பத்தி யதேச்சையாகக் கண்ணில் பட்டது.
கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவிற்குப் பொறுப்பற்றுப் போகும் என்பதற்கு உதாரணம்… யூ-ட்யூபில் தேசப்பிதா காந்தி வேஷத்தில் போல்டான்ஸ் ஆடுவதாக ஒரு வீடியோ வைத்திருக்கிறார்களாம். நான் பார்க்கவில்லை. என் மகன் பாதி பார்த்து நிறுத்திவிட்டு, அதிர்ந்து போய்ச் சொன்னது… ‘இதைவிடக் கேவலப்படுத்த முடியாது. அப்பா… நீங்கள் எல்லாம் அதிர்ஷ்டம் பண்ணினவர்கள். உங்கள் இளைமக் காலத்தில் இன்டர்நெட் இல்லை!’
இன்று சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் கோட்ஸேவின் சிலை திட்டத்திற்கு என்ன எழுதியிருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன்.
‘நல்லவேளை நான் செத்துவிட்டேன்’.