ஆங்கிலத்தில், ‘Leave little to the imagination’ என்றொரு சொற்றொடர் உண்டு. படு ஆபாசமாக உடையணிந்து வருபவரைக் குறிப்பதற்கு அதிகம் பயன்படும் idiom. சென்ற பத்தாண்டுகளில் சினிமாவில் நாயகிகள், இன்றெல்லாம் mallகளில் யுவதிகள் என்று அவை இயல்பாகிப் போனது வேறு விஷயம்.
இந்த விஷயம் பாற்கடலில் லா. ச. ரா. வின் வரிகள் –
“எழுத்தைப் படிக்கையில், வரிகளுக்கிடையே, எழுதாத சொற்கள், வாசகனின் யூகத்துக்கு எப்படி ஒளிந்திருக்கின்றனவோ, அதேபோல் சித்திரத்தில் வரையாத கோடுகளுக்குள் காட்டாத மேனி காத்துக்கொண்டிருக்கிறது என்பது என் துணிபு.”
சித்திர மேட்டரை Mohamed Sardhar வசம் விட்டுவிடுகிறேன். சொற்பம் பழக்கம் என்பதால் எழுத்தை மட்டும் சொல்கிறேன்-
முகத்தில் அடித்தாற்போல் சொல்லப்படும் ஆக்கத்தைவிட, சோம்பலில் கிடக்கும் என் புத்தியைத் தட்டுபவைதான் எனக்கு உவப்பு. அதாவது ‘Leave more for imagination.’
துணுக்கு, திட்டமிடாத பத்தி என்று அதை நானும் முயற்சி செய்திருக்கிறேன். அத்தி பூத்த கருத்து அன்பர்களிடமிருந்து வரும். “சரி… இப்ப என்ன சொல்ல வர்றீங்க?”
அந்தக் கேள்வியும் இல்லாவிட்டால் நான் முன்னேறுவதுதான் எப்படி?