மேதாவி

by நூருத்தீன்

எந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி, விதம், தன்னை கவனித்துக் கொள்ள ஜீவனுக்கு எப்பவுமே தன் சக்தி உண்டு. அதன் வழிதான் உற்ற வழி.

எழுத்திலும், எழுத்தாளனின் பங்கு அப்படித்தான். தன் மேதாவித்தனத்தைக் காட்டாமல், சமய உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

oOo

ம்ஹும். இதை நான் சொல்லவில்லை. என் மேதாவிலாசம் அந்தளவெல்லாம் கிடையாது. லா. ச. ரா.தான் எழுதியிருக்கிறார்.

இப்படி இதை இங்கு பகிர்வதே என் மேதாவிலசமோ என்று சிறு தடுமாற்றம் ஏற்படுகிறது. உண்மை என்னவென்றால், குறிப்புத் தாள் போல இந்த FB வாலில் குறித்து வைத்துக்கொண்டால், எப்பொழுதாவது தேட வேண்டி வந்தால் எளிது.

தவிர சென்னை ஆட்டோக்களில் பின்புறம் இருக்கும் பொன்மொழிகள் நம் கண்ணில் படுவதைப்போல், தப்பித் தடுமாறி என் FB Wall ஐக் கடக்கும் எழுத்தார்வலர் யாருக்கேனும் இது தென்படலாம்.

பின் குறிப்பு: இது FB யில் நான் எழுதியதைக் காப்பியடித்து இங்கு பகிர்வது. எனவே மேலே FB என்ற இடத்திலெல்லாம் ஓலைச் சுவடி என்று மாற்றி வாசிக்கவும். 

Related Articles

Leave a Comment