469
முடிவெடுத்துவிட்டேன்.
இனி சமரசமில்லை.
யார் தூது சுமந்து வந்தாலும் சரி,
என்ன விதமான வாக்குறுதி
தந்தாலும் சரி
எவருக்குமில்லை இனி என் ஆதரவு!
இதுவே என் இறுதி முடிவு.
முடிவெடுத்துவிட்டேன்.
பி.கு.
அப்படி என் மேல்
இரக்கம் ஏதுமிருப்பின்
நான் பயணம்
செல்ல வர
தோதான பெட்டி இருப்பின்
அனுப்பி வைக்கவும்.
#தேர்தல்