அரசியலிலும் செய்திகளிலும் கவனம் செலுத்தாதவனுக்கு உலக மகா அவஸ்தை ஒன்று இருக்கிறது. இந்த ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவது.
யோசனையுடன் சன்னலுக்கு வெளியே பார்த்தால் இருட்டு. இன்று 4:24-க்கு அஸ்தமனம் என்றாலும் 4:28-க்கு இந்த இருட்டு சற்று அதிகப்படி.
மழையை அழைத்துக் கொண்டு கருமேகம் வந்திருக்கு. 4 டிகிரி ஜில்லிப்புடன், பெய்தலுக்கும் தூறலுக்கும் இடைப்பட்ட மழை.
கிளம்பி வீட்டை அடைவதற்குள் “ஜில்“ முகத்தை வருடும். பெரும் சோதனைதான். போகட்டும் தாங்கிக்கலாம்.
தோட்டாக்களுக்கும் குண்டுகளுக்கும் இடையே மனித இனத்தில் ஒரு பகுதி உலகின் மற்றொரு பகுதியில் மாய்வதை நினைத்துக் கொண்டால் இந்த ஜில்லு தொந்தரவாக இருக்காது என்றே தோன்றுகிறது.
கண் சுடுநீர் வார்த்தால் முகத்துடன் சேர்த்து மனமும் இதமடைய வாய்ப்பிருக்கு. பார்ப்போம்.
#கட்டுரை