நெரிசல் சென்னை

by நூருத்தீன்

மூன்றாண்டுகளுக்கு முன் சென்னையில் சகோ. CMN சலீமைச் சந்தித்தபோது அவர் பகிர்ந்த கவலைகளுள் சென்னை நெரிசல் வாழ்க்கையும் ஒன்று. தொழில் காரணம், பிள்ளைகளின் மேற்படிப்பு இப்படி ஏதேனும் காரணத்தால் தம் ஊரின் விசாலத்தை, உறவுகளைத் துறந்து சென்னைக் குடியிருப்புகளின் இடுக்கு முடுக்குகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள், அவர்களின் எலிப்பொறி ஜாகைக்கும் இல்லாத வசதிகளுக்கும் இரக்கமேயில்லாமல் பட்டணம் வசூலிக்கும் வாடகை என்று சமூகநீதி முரசு ஆசிரியரின் பேச்சில் நிறைய விசனம், சமூக அக்கறை.

முக்கால் நூற்றாண்டுக்குமுன் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே மதராஸ் இப்படித்தான் இருந்திருக்கிறது என்பதை லா. ச. ரா.வின் பாற்கடலில் வாசிக்கும்போது ஆச்சரியம் ஏற்பட்டது.

“திருவல்லிக்கேணி அருணாசல ஆச்சாரித் தெருவில் அன்றிலிருந்தே தண்ணீருக்குத் தகராறுதான். குழாய்க்கு அடிக்கடி சுவாஸம் கட்டி இழுக்கும். ஆனால் குடித்தனங்களுக்குக் குறைவில்லை. பட்டணத்தின் மர்மமே இதுதான். ஆயிரம் அசெளகரியங்களிடையே அத்தியாவசியங்களைக்கூடத் தியாகம் பண்ணிக்கொண்டு நெரிசலே ஆனந்தம்.“ (பாற்கடல், லா.ச.ரா.)

அந்த வரிகள் சொல்லும் மர்மம், ஆனந்தம் இரண்டும் இன்றும் உண்மை என்பேன். இருந்தாலும், இன்றைய சென்னையைப் பார்த்தால் லா.ச.ரா. என்ன சொல்வார்?

“நல்லவேளை தாத்தா செத்துட்டார்” என்பாரோ அவர் பேரன்.

Related Articles

Leave a Comment