VS முஹம்மது அமீனின் ‘பிரசுரத்திற்குத் தேர்வாகாத கவிதை’ ஒன்று கணையாழியில் இம்மாதம் (டிசம்பர் 2017) பிரசுரமாகியுள்ளது.
அதிலுள்ள இவ் வரிகள் –
பிரபல்யமில்லாத
சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத
யாதுமற்றவன் எழுதியனுப்பிய
கவிதையிது
வக்கிரம் சேராத இதன் வரிகள்
எல்லாருக்கும் புரியும்படியாக வேறு
இருக்கிறது
கவி உலகைத் தாண்டியும் பொருந்தும் என்பது என் கருத்து. அவ்வப்போது இப்படியும் சிலவற்றை சமூக ஊடகப் பயனர்கள் வாசித்து வைப்பது நலம். நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு குறையும்.