காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சத்துடன்தான் சென்றார்கள்.
ஆனால் இனிய முகத்துடன் வரவேற்று எத்தனை ஸீட் என்று விசாரித்தார்.
“ஐந்து”
உடனே ஓக்கே சொல்லி எந்தப் பகுதியை விரும்புகிறீர்கள்? என்றார்.
அரவமற்ற ஒதுக்குபுறமான பகுதியைக் காட்டினார் இல்லாள்.
அழைத்துச் சென்று அமரவைத்து மெனு கார்டை ஆளுக்கொன்று அளித்துவிட்டு அகன்றார் அந்தப் பணியாள்.
எப்பொழுதுமே பிஸியாக இருக்கும் அந்த ஹோட்டலில் உடனே ஸீட் கிடைத்தது, Facebook-இல் பகிர்தே ஆகவேண்டிய முக்கியச் செய்தி.
மெனு கார்டைக் கூடப் படிக்காமல் உடனே ஸ்மார்ட் ஃபோனில் தட்டினான்.
#குட்டிக்கதை