இரண்டு நாள்களுக்குமுன் அண்மையில் உள்ள (40 கி.மீ.) மற்றொரு பள்ளிக்கு நோன்பு திறக்கச் சென்றிருந்தேன். தமிழ் சகோதரர்கள் அங்கு வருவார்கள். சந்திக்கும் ஆவல்.
சகோதரர் ஒருவர் அங்குள்ள பள்ளிவாசலின் பிரச்சினையைப் பற்றி மற்றொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். இறுதியில் என்னிடம், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றார்.
நமக்கு எதுக்கு அந்த பள்ளியின் அரசியல் என்று “எனக்குத் தெரியலை. நான் வெளியூர்” என்றேன்.
அருகிலிருந்த Safath Ahamed சிரித்தார். “ஏன்?” என்றேன். கதை சொன்னார்.
இரண்டு குடிகாரர்களுக்கு இடையே வாக்குவாதம். ஒருவன் நிலவைக் காட்டி “அது நிலா” என்றான்.
மற்றவன் “இல்லை சூரியன்” என்றான். வாக்குவாதம் முற்றிப்போய் அவ்வழியே சென்ற ஒருவரை அழைத்திருக்கிறார்கள்.
“அது நிலவா, சூரியனா? நீங்களே சொல்லுங்க” என்றதும் அந்த மூன்றாமவர், “எனக்குத் தெரியலீங்க. நான் வெளியூர்.”
#அனுபவம்