கடினமான தத்துவங்களுக்கும் எளிதான உவமைகளில் விளக்கம் அளித்தபடி இருந்தார் பேராசிரியர். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகியும் வியந்து அமர்ந்திருந்தது கூட்டம்.
முத்தாய்ப்பாக, “உலகில் எந்த விஷயம் தப்பானாலும் பரவாயில்லை. கலைத்துவிட்டு முதலில் இருந்து தொடங்கிவிடலாம். ஆனால் வாழ்க்கை? தப்பான வாழ்க்கையை
முதலில் இருந்து மீண்டும் தொடங்க வாய்ப்பே இல்லை.”
கூட்டத்தில் ஒருவர் கையை உயர்த்தினார்.
“கேளுங்கள். என்ன சந்தேகம்?”
“ஒன்றுமே புரியலே. முதலிலிருந்து சொல்லுங்கள்.”
#குட்டிக்கதை