நெருக்கியடிக்கும் கூட்டம். ஒடுங்கிக்கொண்டுதான் தொழும்படி இருந்தது. நிரம்பி வழிந்த பள்ளிவாசலின் வெளியே நடப்பட்டிருந்த கூடாரமும் ‘ஹவுஸ்ஃபுல்’.
இறுதிப் பத்தில் தேடிக் கொள்ளுங்கள் என்று ஹதீஸ் ஆதாரங்கள் இருந்தும் அதுகுறித்து பலப்பல வியாக்கியானங்கள் சொல்லப்பட்டிருந்தும் எல்லாவற்றிற்கும் மேலாக
‘குர்ஆன் ஃகத்தம்’ இந்த ஆண்டு 29ம் இரவுதான் நடைபெறும் என்று இமாம் அறிவித்திருந்தும்…
பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள் நிரம்பும் அந்த பள்ளிவாசலில் மட்டும் 27ம் இரவு முதல் பத்தியாகி, நேற்றிரவு ஜே! ஜே!
கூட்டத்தைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது. உற்சாகமாகவும் தோன்றியது. ஆனால் நாளன்னைக்கு அடுத்த நாளே பள்ளிவாசலின் கூடம் ‘ஜிலோ’ என்றாகிவிடும் என்ற யதார்த்தம் சுட்டது.
பள்ளிவாசல் என்னவோ அசராமல் விசாலமாகக் காத்துக்கொண்டுதான் உள்ளது வாரத்திற்கு ஒருநாளும் ஒன்பதாம் மாதத்தின் சிலபல நாள்களும் குழுமுபவர்களுக்காக!