312
“வயர்களை நெற்றியில் கட்டி பத்து நொடி அசையக்கூடாது. கணினியிலுள்ள மென்பொருள் DNAவைத் திருத்திவிடும். பிறகு கூன், குறுகல் வாழ்க்கை முற்றும்” என்றான் விஞ்ஞானி ஜி.
“சுயமரியாதையே வா!” என்று உடனே கட்டிலில் பாய்ந்து படுத்தார் மாஜி.
ஆறாம் நொடியில் செக்ரட்டரி அவசரமாக நுழைந்து “ஃபோனில் அம்மா” என்றான்.
வயர்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு ஓடினார்.
நொடி பத்து.
#குட்டிக்கதை