நோயாளி

by நூருத்தீன்

அம்மா: டாக்டர்! என் மகனின் மனநிலை சரியில்லை!

டாக்டர்: என்ன பிரச்சினை? எதை வெச்சு சொல்றீங்க?

அம்மா: 15 வயசாவுது. எப்பப் பாரு ஏதாவது புத்தகமும் கையுமா இருக்கிறான்.

டாக்டர்: நல்லதுதானே. அதில் என்ன பிரச்சினை?

அம்மா: இவன் வயசுப் புள்ளைங்கள்ளாம் ஸ்மார்ட்ஃபோன், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்னு பிஸியா இருக்காங்க. மாடியில இருக்கிற இவனுக்கு sms அனுப்பிச்சா கூட நேர்ல வந்து என்னம்மா வேணும்னு கேக்குறான். இப்படியே இவன் முன்னேறாமப் போயிடுவானோன்னு கவலையா இருக்கு டாக்டர்.

டாக்டர்: நாளைக்கு அவனை க்ளினிக்குக் கூட்டிட்டு வாங்க. செக் அப் செய்றேன்.

Skype call ஐ முடித்தார் டாக்டர்.

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment