பயணியின் டைரிக் குறிப்பு

by நூருத்தீன்

உல்லாசக் கப்பல் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. காப்புப் படகில் ஒரே ஒருவருக்கு மட்டும் இடம். ஒரு கணவன் தன் மனைவியைத் தள்ளி விட்டு, முந்திக்கொண்டு காப்புப் படகில் பாய்ந்தான். 

பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அவனைப் பார்த்து அதிர்ச்சி. ‘அட சுயநலக் கிராதகனே!’

 

கப்பலின் மேல் நின்றிருந்த மனைவி கீழே படகில் இருந்த கணவனைப் பார்த்துக் கத்தினாள்.

o-o-o

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் –

தந்தையின் டைரியை மகள் மீண்டும் வாசித்தாள். தினமும் நாளிதழை வாசிக்க மறந்தாலும் இந்த டைரியை மட்டும் மறப்பதில்லை. அதே பக்கம், அதே வாசகங்கள். ஆனாலும் அலுப்பதேயில்லை.

“புற்று அவளுக்கு முற்றும் போடப் போகிறது என்று ஊர்ஜிதமாகிவிட்டது. இறுதியாக ஓர் இனிய பயணத்திற்கு அவளை மட்டும் அழைத்துச் சென்றேன். அது இறுதிப் பயணமாகவே ஆகிவிட்டது.”

“அவள் உச்சக் குரலில் என்னைப் பார்த்துக் கத்தினாள். ‘நம் மகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’.”

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment