முகநூல் கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும். Facebook-இல் கவனித்த சில விஷயங்களின் அடிப்படையில் இரண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள

உதவும் இன்‘ஷா அல்லாஹ்.

ஒன்று –

இருபாலார் புழங்கும் பொதுவெளியில் எத்தகைய ஹிஜாப் சட்டங்கள் உண்டோ, அவை அனைத்தும் virtual வெளிகளிலும் பொருந்தும். என்னதான் சகோதரன், சகோதரி என்று நாம் அழைத்துக் கொண்டாலும், அது Brother in Islam, Sister in Islam தானே தவிர, இறைவன் நியமித்துள்ள mahram, non-mahram விதிகளுக்கான exceptionகள் அல்ல.

ஒருவர் non-mahram ஒருவரிடம் நேரில் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் பரிகாசம் புரிவதற்கும் எந்தளவு அனுமதி உண்டோ அதே அளவுகோலே virtual உலகிற்கும். அந்த அளவுகோலானது நபியவர்கள், தோழர்கள், தோழியர் non-mahram-டம் நடந்துகொண்ட செயல்முறைகள் மட்டுமே.

அடுத்தது –

இறைவன் மனிதர்களை பலவீனர்களாகப் படைத்திருக்கிறான். ஒவ்வொருவரிடமும் குறை இருக்கத்தான் செய்யும். Non-mahram புழங்கும் பொதுவெளியில் தங்களுடைய spouseகளின் குறைகளை, பரிகாசத்தைப் பகிர்ந்து கொள்வது உகந்த செயலன்று. அது எத்தகைய reactionகளுக்கு வித்திடுகிறது என்று இன்றைய உளவியலாளர்கள் நிறைய எழுதியுள்ளார்கள். சிலவற்றை தமிழ் பத்திரிகைகளிலும் வாசித்துள்ளேன்.

ஏன் இவை, இப்பொழுது என்றால், ஒருவருக்கொருவர் நன்மையை ஏவிக் கொள்ளுங்கள், அறிவுறுத்திக் கொள்ளுங்கள், நினைவுறுத்திக் கொள்ளுங்கள் என்பதனாலேயே.

Never under estimate the power of shaytaan. அவன் நிச்சயமாக நமக்கு பகிரங்க எதிரியாவான்.

நம்மை நேர்வழியில் வழிநடத்திட அல்லாஹ் போதுமானவன்.

வஸ்ஸலாம்.

அன்புடன்,
-நூருத்தீன்

Related Articles

Leave a Comment