புலி

by நூருத்தீன்

கோரப் புலி அந்தக் காட்டில் பதுங்கியிருப்பதாகச் சொன்னார்கள். கெட்டப் புலி அது; நல்லவன் கெட்டவன் பார்க்காது. அடிச்சுத் தின்னுட்டு ஏப்பம் விட்டுட்டுத்தான் அதுக்கு மறுவேலை என்று ஆளாளுக்கு எச்சரிக்கை.

அவனுக்கு அந்தக் காட்டைத் தாண்டி அடுத்த ஊருக்குப் போயே ஆகவேண்டும்.

குடும்பத் தலைவி ஒரு வேலை ஏவியிருந்தாள். அதைத் தட்ட முடியாது. அவளை நினைத்துப் பார்த்தான்.

‘ம்ஹும்! புலிக்குப் பயந்தால் ஆகாது.’

ஊர் கூடி அழ காட்டுக்குள் புகுந்துவிட்டான். மூக்கு சிந்திப் போட்டு அவரவர் வீட்டிற்குத் திரும்பியது ஊர்.

மறுநாள் உயிருடன் திரும்பியவனை, “என்ன? எப்படி?” என்று கோரஸ் கூக்குரல்.

பெரும் சிரிப்புடன் தன் தந்திரத்தைச் சொன்னான். “உடம்பைச் சுற்றி புல்லுக் கட்டை கட்டிக் கொண்டேன். புலி பசிச்சாலும் புல்லைத் திண்ணாதே!”

‪#‎தத்துவக்கதை‬

Related Articles

Leave a Comment