நம்முடைய வரலாற்றைப் படித்தால், தோழர்களைப் படித்தால் அதை முதலில் நமக்கு apply செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் அவரைப் போல் இல்லை; இவர் அவரைப் போல் இல்லை என்று என் சுட்டு விரலை
நீட்டுவதற்குமுன் –
அந்த வரலாற்று முன்மாதிரிகளுள் ஒரே ஒருவரைப் போலாவது நான் இருக்கிறேனா, ஆவேனா, முயற்சி செய்வேனா என்பதாகத்தான் என் முதல் சிந்தனை அமைய வேண்டும்.
இன்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தமிழக அரசியல், முஸ்லிம் கட்சிகளின் அரசியல் போன்றவற்றில் சம்பந்தப்பட்ட கட்சி, கட்சியாளர்களின் initial களைத் தாண்டி வேறெதுவும் அறியாத பாமரன் நான்.
நான் படிக்க விரும்பும் பாடம் அரதப் பழசு!
ஆசான்கள் ஆயிரத்து நானூற்று சொச்ச ஆண்டு பழசானவர்கள்!