கருத்தொற்றுமை

by நூருத்தீன்

“கருத்து வேறுபாடு இயற்கையின் நியதி” என்றார் அழகப்பன். 

“முரண்படுகிறேன்” என்றேன். அழகாகத்தான் சொன்னேன். இருந்தாலும் அழகப்பனுக்குக் கோபம். பாய்ந்து வந்து

என் தாடியைப் பிடித்துக் கொண்டார். 

நானா விடுவேன்? அவர் ‘தல’ முடியைக் கொத்தாகப் பிடித்தேன். இலேசாக வழுக்கியது. இருந்தாலும் மாட்டியது. 

மனுசனுக்கு வலித்திருக்க வேண்டும். “உங்கள் கருத்தை ஏற்கிறேன்” என்றார். 

எனக்கும் வலித்ததால் “நானும்” என்றேன். 

மயிர் பிழைத்தது. 

‪#‎குட்டிக்கதை‬

Related Articles

Leave a Comment