அரிக்கேன் விளக்கு

by நூருத்தீன்

வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெரும்பாலான மவராசர்கள் அரிக்கேன் விளக்கு, தெரு விளக்கு போன்றவற்றின் அடியில்தான் ஞான ஒளி பெற்றிருக்கிறார்கள். படித்து, பட்டம் வாங்கி முன்னுக்கு வந்து தலையில் சாதனைக் கிரீடம் சுமந்திருக்கிறார்கள்.

 

எத்தனைப் பேட்டிகள் படித்தாலும் சிலிர்க்கும் ரோமத்துடன் அடங்கிவிடுகிறது சிலாகிப்பு. குறிப்பாகத் தமிழர்களுக்கு. எவராவது ஃப்யூஸ் கட்டையைப் பிடுங்கிவிட்டு அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொள்கிறார்களா?

இப்படித் தமிழர்கள் சொரணையற்றுக் கிடப்பதைப் பார்த்துத்தானே மின் வெட்டித் தொலைக்கிறது அரசாங்கம். அப்பவும் அரிக்கேனில் புத்தகத்தைப் படிக்காமல் குற்றம்; குறை; நக்கல்; நையாண்டி; கார்ட்டூன்.

உருப்படுவானாய்யா தமிழன்?

‪#‎துண்டிலக்கியம்‬

Related Articles

Leave a Comment