பிஞ்சு விரல் ஒவ்வொன்றுக்கும் சோறு, ஆணம் என்று கற்பனையில் ஆக்கி, அதன் உள்ளங்கையில் குழைத்து, குடும்பத்தில் அனைவருக்கும் ஊட்டி, கழுவி கழுவி காக்கைக்கும் நரிக்கும் ஊற்றி…
நண்டூருது, நரி பாயுது என்று விரல்களை ஓட்டினால்,
இன்றைய குழந்தையும்கூட பொக்கை வாயால் அப்படிச் சிரிக்கிறான்.
இதைப் போன்ற காலத்தால் அழியாத உள்ளங்கை குதூகலங்களை உள்ளங்கை சாதனங்களிலும் கூகுளிலும் தொலைத்துவிட்டு, life is so stressful என்று புலம்பிக்கொண்டிருக்கிறோம்.
முழுதாக முடியாவிட்டாலும் தினசரி சில மணி நேரமாவது இச் சாதனங்களிலிருந்து விடுபட்டு வாழ முயல்வதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
இயல்பாய் சிரித்து வாழ கிச்சு கிச்சு பொழுதுகள் நமக்காக இன்னமும் காத்திருக்கின்றன.