ஏப்ரல் 6
பத்திரிகை ஆபிஸிலிருந்து இன்றும் மூட்டைக் கடிதங்கள். கையில் அகப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்தார்.
ஜோதிடத் திலகமே! தீர்க்கதரிசியே! … என்று வழக்கம்போல் புகழாரம். அலுத்தது. எத்தனை முறைதான்
ஒரே மாதிரியான வாசகர் கடிதங்களைப் படிப்பது? தான் அதே விஷயங்களை மாற்றி மாற்றி எழுதுவதைப்போல் ‘போர்’.
அலமாரியில் அவரது பழைய டைரி. எடுத்தார். பத்தாண்டுகளுக்கு முந்தையது. புரட்டியவர் விரல் அன்றைய தேதியில் நின்றது.
‘நாளை நான் இறந்துவிடுவேன்.’
“ஐயோ!”
#குட்டிக்கதை