நேற்று வாசித்த இந்த ஊர் செய்தி!
கணவனுக்கு கடுமையான வாய்வு தொல்லை போலும். உறக்கத்தின் போதும் அவனது வயிறு தொடர்ந்து பணி புரிந்திருக்கிறது.
நள்ளிரவு தாண்டிய நேரம். தாங்கமாட்டாத மனைவி சொல்லி, சொல்லிப் பார்த்திருக்கிறாள். மனைவியின் சொல்லுக்குக் கணவன் கட்டுப்படலாம். அவனது வயிறும் கட்டுப்பட வேண்டும் என்பது விதியா என்ன? மறுத்திருக்கிறது.
அவ்வளவுதான். கட்டிலில் இருவரும் கட்டிப்புரண்டு, சண்டை, அடிதடி ரகளை! அந்நேரத்திற்குப் போலீஸை அழைத்து, வந்து விசாரித்தவர்கள் கணவனின் காய கோலத்தைப் பார்த்துவிட்டு, மனைவியைக் கைது செய்து, அவள் இப்பொழுது ஜெயிலில்.
ஜெயிலில் அவளைக் காற்று வசதி இல்லாத இடத்தில் அடைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
பாடம் யாதெனில், ‘அதொன்றுமில்லை கேஸ் ட்ரபிள்’ என்று அசட்டையாக இருந்துவிடாமல் மொட்டை மாடியிலோ, பாத்ரூமிற்கு அருகிலோ சயண மெத்தையை அமைத்துக் கொண்டால் குடும்ப வாழ்வு சிறக்கும்.