சீனத் தயாரிப்புகளை ‘சைனா ப்பீஸு’, ‘சைனா ப்ராடக்ட்டு’ என்று குறிப்பிடும் நக்கல் வார்த்தைகள் பலருக்கும் பரிச்சயம்; சிலருக்கு இயல்பு.
பதக்கப் பட்டியல் இன்று கண்ணில் பட்டது. இரண்டாவது இடம் சீனா! அவர்கள் வென்ற தங்கம் மட்டுமே 26.
நாம் வென்ற பதக்கம் மொத்தமே இரண்டுதான். அதில் தங்கம்…
சரி அதை விடுங்க.
அப்பா படத்தில் ஒரு டயலாக் ரிப்பீட் ஆகும். மங்குணி அப்பா கேரக்டர் ஒன்றை நேரடியாகக் குறை சொல்லாமல், அவரின் திறமைசாலி மகனைப் பற்றிக் குறிப்பிடும், “வளர்ப்பு சரியில்லேப்பா”.
அதுதான் நினைவுக்கு வருகிறது!
#ஒலிம்பிக்ஸ்2016