தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து மாமங்கத்துக்கு மேல் ஆச்சு! இங்கு என்றில்லை. இந்தியாவுக்கு வந்தாலும் அப்படித்தான்.
இன்று என் மனைவி கணினியில் ஏதோ ஓர் இணைய தளத்தில் தமிழ் செய்தி சேனலை மேய்ந்து கொண்டிருந்தார். வாசகங்கள் காதில் விழுந்தன. செய்தியை அளிப்பதைவிட பரபரப்பும் படபடப்பும் நம்மைத் தொற்ற வைப்பதுதாம் அவற்றில் நோக்கமாக ஒளிந்திருந்தன என்பது எளிதில் விளங்கியது.
என்ன காரணத்திற்காக அன்று நிறுத்தினேனோ அது இன்றும் அப்படியேதான் இருக்கிறது – இன்னும் வீரியமாய் என்பதை உணர்ந்ததும் எனக்கு மகிழ்ச்சி.
பின்னே?
நாள்தோறும் டிவிக்கு செலவழிக்கும் நேரம் எனக்கு மிச்சமாவதுடன், என் மூளை சலவைக்கார ஊடகங்கள்களின் வெள்ளாவியில் சிக்கும் ஆபத்து குறைகிறதே!