வாகனத்தை ஓட்டும்போது நேர் பார்வை;
அதில் பயணிக்கும் போதும் புத்தகம், ஃபோன் என்று நேர் பார்வை.
இப்படியே பழக்கமாகி, இன்று தலையைத் திருப்பி வெளியே வேடிக்கை பார்த்தால்தான் தெரிகிறது கூடவே ஓடிவருவதை அந்தக் காட்சிகள் இன்றும் நிறுத்தவில்லை என்பது.
தொலைந்துபோன பாலக வாழ்க்கையும் தஞ்சைப் பயணத்தின் சோழன் ரயில் ஜன்னலும் நினைவுப் பெட்டகத்திலிருந்து கிளர்ந்தெழுந்துவிட்டன.
அலட்சியத்தனத்தால் எத்தகு மகிழ்ச்சிகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன்!
டிஜிட்டல் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி தினமும் சில நிமிடங்களாவது இந்த organic சமாச்சாரங்களை அனுபவிக்க வேண்டும்.
தவிர்த்துவிட்டு வாழ்வது அல்பத்தனம்.