பந்த்

by நூருத்தீன்

மூடியிருந்த ஷட்டரை வேகமாகத் தட்டினான். பக்கத்திலிருந்த ஜன்னலில் இருந்து தலை மட்டும் எட்டிப்பார்த்து, “என்னா?” என்றது.

“பொண்டாட்டிக்கு முடியல. ஆஸ்பத்திரிக்கு போய்ட்டிருக்கேன். அவளுக்கு மயக்கமா வருதாம். ஒரு பாட்டில் தண்ணீ தா” என்று மூச்சிரைக்க ரூபாயை நீட்டினான்.

“யோவ்! போய்யா! தண்ணீ கிடையாது. இன்னிக்கு பந்த்னு தெரியாது?”

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment