தொலைந்த தலைமுறை

by நூருத்தீன்

தாயொருத்தி
நிலவைச் சுட்டி
சோறூட்டுவதையும்
தாலாட்டுடன் தூளி
ஆட்டுவதையும்
தொலைக்காட்சியின்
அகன்ற திரையில் விரிவதை
ரசித்துச் சிரித்தபடி
பகல் காப்பகத்தில்
குழந்தை

***

நிலவைச் சுட்டி
சோறூட்டி
தாலாட்டுடன் தூளி
ஆட்டி
தாம் வளர்த்த பிள்ளைகள்
வருவார்கள் என்ற நம்பிக்கையில்
சாய்வு நாற்காலியில் சரிந்தபடி
முதியோர் இல்லத்தில்
தாயொருத்தி!

#கவிதை

Related Articles

Leave a Comment