பொறாமை

by நூருத்தீன்

இந்தப் பொறாமை இருக்கிறதே பொறாமை, அது உலக விஷயத்தில்தான் ஏற்படுகிறது.

‘அந்தாளப் பாரு, ராவெல்லாம் தொழறான்’, ‘இந்தாளப் பாரு அப்பப்ப உபரி நோன்பு இருக்கிறான்’ என்று யாராவது பொறாமை கொண்டு போட்டி போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு ஏன், அறிஞர்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் கூட அவருக்குக் கிடைக்கும் பெயரையும், புகழையும் கண்டுதான் புஸ், புஸ் என்று நெஞ்சு கொதிக்கிறார்களே தவிர, அவரது ஞானத்தைப்போல் நானும் ஞானம் பெற உழைக்கப் போகிறேன் என்றா வரிந்து கட்டுகிறார்கள்?

நான் தமிழில் மொழிபெயர்த்துக் கிழித்ததின் மூலம் கீழே:

Envy only occurs in regards to worldly matters as you will not find people envying those who pray at night or those who frequently fast, neither do they envy scholars for their knowledge rather they envy those who have fame.

Excerpt from Tibb al-Ruhani (Disciplining the Soul) by Imaam Ibn al-Jawzi.

Related Articles

Leave a Comment