மர்டர்

பட்டப்பகலில் பலர் நடுவில் நடுவீதியில் முதியவரைக் கத்தியால் குத்திக் கொன்றான் ஓங்குதாங்கான டுமீல் பாபு.

“கெயவா! எங்களப்பத்தி போலீஸாண்ட போட்டா குடுக்கிறே? சாவு மவனே”

செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம்.

ஒல்லிப்பிச்சு ஷாவுக்கு அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை.

பக்கத்திலிருந்த தர்பூஸ் வண்டியிலிருந்த கத்தியை உருவினான்.

‘ஏய்ய்ய்’ என்று ஓடினான். அந்தக் கிழவரைக் குத்தினான்.

“சாவுடா கெழவா! எங்கத் தலையவே காட்டிக் கொடுக்கிறியா நாயே!”

டுமீல் பாபுக்கு முகமெல்லாம் ஆச்சரியம். சகாக்களிடம், “இதப்பார்ரா! செத்த பாம்பை அடிக்குது இது”

கிழவரின் மார்பிலிருந்து கத்தியை உருவ ரத்தம் சொட்டியது. “தம்பி நீ வூட்டுக்குப்போ. இந்தா” கத்தியை கொடுத்தான்.

கவனமாக ஒரு துணியைச் சுற்றி வாங்கிக்கொண்டான் ஷா.

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment