பழிக்குப் பழி

by நூருத்தீன்

வழக்கம் போல் மறதி. துடைக்கும் துவாலையின்றி குளியலறைக்குள் சென்று விட்டான். கிழட்டு வயதில் வரும் மறதி போலன்றி இது பிஞ்சிலேயே பழுத்தது.

ஈரம் சொட்டச் சொட்ட, “துண்டு கொண்டா” என்று சப்தமாக வேண்டுகோள் விடுத்தான்.

துண்டு வந்தது. கூடவே, “ஒரு துண்டு எடுத்துக்க நினைவிருக்க மாட்டேங்குது. என்னத்த நீங்க இலக்கியவாதி, துண்டிலக்கியவாதின்னு” என்று செல்லார்ச்சனையும்.

‘இந்தா பாரு. என்னை என்ன வேணாச் சொல்லு. என் எழுத்தை இழுக்காதே’ கோபமாக மனத்திற்குள் மட்டும் நினைக்க அவனுக்கு உரிமை இருந்தது.

முடித்து, பசியாறும்போது அந்த வாசம் மூக்கைத் துளைக்க, “பாரு. உன் தோசை தீஞ்சுடுச்சு”

‘ஹா ஹா ஹா.. யாரு கிட்டே!’

‪#‎துண்டிலக்கியம்‬

Related Articles

Leave a Comment