ஒரே சேனல், செய்திப் பத்திரிகைகள் சிற்சில, வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி என்று தொண்டை கமரும் டிரான்ஸிஸ்டர் காலம் பொற்காலம்.
கையில் திரையைத் திணித்துவிட்டு, முகநூல், வாட்ஸ் அப், வைபர், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், நிமிடத்திற்கு நூறு கிராம் செய்திகள், தகவல்கள், ‘அப்படியாமே, உண்மையா?’ எனும் வதந்திகள்
என்று சிறுநீர் கழிக்கும்போதுகூட ஒரு கையை சோதிடனாக்கிவிட்டது விஞ்ஞான நுட்பம்.
இவற்றையெல்லாம் சமாளித்து மீண்டு, கையைக் காலை உதறி, தலையைச் சிலிர்த்து, ஃபார்வேர்டு உலகைத் தாண்டி சுயமாகக் கிறுக்க முனையும்போது, சம்சாரிக்கு சம்சாரப் பொறுப்புகளைச் சுமத்தவில்லை என்று யார் அழுதது?
தட்டிக் கழிக்க மறுப்பது கேவலம்.
தனியொருவனுக்கு அடுத்த வேளை உணவு உத்தரவாதமில்லையெனில் லேப்டாப்பை மூடிவிடுவோம்.
#துண்டிலக்கியம்