குரு சிஷ்யன்

by நூருத்தீன்

“மனம் அலைபாயுது. கவனம் சிதறுது. பேரமைதி பெற உபதேசியுங்கள் குருவே” என்று கைகட்டி நின்றான் புது சீடன்.

சுகந்த மெழுகுவர்த்திகளின் ரம்மிய ஒளியில் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்திருந்த குரு சுருக்கமாகப் புன்னகைத்தார். அவரது கண் ஜாடைப் புரிந்து, ஒரு தாம்பாளத்துடன் கழுதையை ஓட்டி வந்தான் பணியாள்.

கேள்வி கேட்ட சீடனிடம், “தெருவுக்குச் செல். கழுதையின் மீது அமர். உன் தலையின்மீது இந்தத் தாம்பாளத்தை வைத்து அதன்மீது ஒரு துளி பாதரசம் தெளிப்பான் இவன். தாம்பாளத்தைப் பிடித்துக்கொள். கடைத்தெருவை கழுதை சுற்றிவரும். பாதரசம் வழுக்கி விழாமல் வந்து சேர். மற்றவை பிறகு” என்று கூறி வழியனுப்பினார் குரு.

அரை மணி நேரத்திற்குப் பின் வந்து சேர்ந்தான் சீடன். “குருவே! நான் பாவி. மோசம் போனேன். பாதரசம் வழுக்கி விட்டது” என்று பதறியவனிடம், “நீ சென்ற மூன்றாவது தெருவின் பெயர் என்ன? இரண்டாவது தெருவில் பேக்கரி திறந்திருந்ததா? எதிர் தெருவில் உள்ள தியேட்டரில் இன்று என்ன படம்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை வீசினார் குரு.

“அதெல்லாம் நான் கவனிக்கலே குருவே. என் கவனமெல்லாம் என் தலையின் மீதிருந்த தாம்பாளத்தின் மீதே இருந்தது” என்று சொன்னவனுக்கு பளிச்சென்று குருவின் பரிட்சை புரிந்தது.

மகிழ்ச்சியில் பொங்கி “குருவே” என்று அவர் காலில் விழுந்தான். காற்றில் அவன் மேலாடைப் போர்வை விலகி மெழுகுவர்த்தியின் சுடரில் விழ போர்வையில் தீ.

அருண்ராஜா காமராஜ் போல் குரலெடுத்தார் குரு, “நெருப்புடா…”

”மகிழ்ச்சி” என்றான் சீடன்.

#குட்டிக்கதை

Related Articles

Leave a Comment