362
“அப்பா இல்லியா?”
“இறந்துட்டார்.”
“சகோதரர்கள்?”
“அண்ணனும் இறந்துட்டார்.”
அந்தப் பாலஸ்தீனச் சிறுவனின்மீது அக்கறையும் பாசமும் மேலும் அதிகரித்தன.
“என்கூட என் நாட்டுக்கு வந்துடறியா?”
“வர்ரேன். அங்கு எனக்கு உயிர்த்தியாகியாக வாய்ப்பு கிடைக்குமா?”
டும்!
சற்றுத் தொலைவில் மற்றொரு குண்டு விழுந்து, காது கிழிந்தது. நிலம் அதிர்ந்தது.
நிலம் மட்டும்தான் அதிர்ந்தது.
#குட்டிக் கதை