தையல்

by நூருத்தீன்

தன் பையன் வால்தனம் செய்து குதித்தற்கு தலையில் தையல் என்றார் நண்பர். வருத்தமாக இருந்தது. அதை விவரிக்கத் தெரியாமல்,

‘கோலிவுட் நாயகர்கள் வால் பையன்களுக்காகவே சிறப்பு வகுப்பு நடத்தினால் தேவலை. பாட்டில் தலையில் சிதறினாலும் அடுத்தக் காட்சியில் தையலுடன் ஐரோப்பாவில் மையல் கொள்ளும் பராக்கிரமர்கள்’ என்று நிலைத் தகவல் மட்டும் பதிந்தேன்.

அடுத்த நாள்

நண்பர் தொலைபேசினார். “உங்கள் போஸ்ட்டைப் படிச்சுட்டு, சிறப்பு வகுப்பு இல்லாட்டிப் போட்டும்பா. தையல் வேணும் என்கிறான் ஸார் என் பையன்.”

அதிர்ச்சியில், “கான்வெண்ட்டில் படிக்கும் பையன் இருக்கும் வீட்டில் நீங்க ஏன் ஸார் தமிழ் அகராதியை கணினிக்குப் பக்கத்தில் வைக்கிறீர்கள்?” என்று எகிறினேன்.

‪#‎குட்டிக்கதை‬

Related Articles

Leave a Comment