நூல்கள் எனது நண்பர்கள் என்று பெருமிதப்பட்ட தகப்பனாரின் காலம் மரித்துப்போய், முகநூலில் என் நண்பர்கள் என்று திரிகின்றனர் வாரிசுகள்.
“நூலுக்கு முன்னாடி முகத்தை மாட்டினால் போதுமா? அறிவு எப்படி வளரும்? சென்ட்ராவ்ய்ஸ்கியைப் பத்தி
நாலு வார்த்தை சொல்லு பார்ப்போம்.”
யோசித்துவிட்டு, “தெரியல, நீங்களே சொல்லுங்க.”
ச்சே! வாயில் வந்ததை அடித்துவிட்டால் இப்படி மடக்குவான் என்று யாருக்குத் தெரியும். விடாப்பிடியாக பேச்சை மாற்றி,
“உன் முகநூல் நண்பர்களிடம் 5000 ரூபாய் கடன் வாங்கிடு பார்ப்போம். தெரியும் நட்பின் யோக்கியதை.”
இப்பொழுது கோபத்தில் மகனுக்கு மூச்சிரைத்தது.
மவனே! என்னிடமேவா?