“குற்றம் சாட்டப்பட்டவர் மனப் பிறழ்வு அடைந்துள்ளதால் அவருக்கு சிறைத் தண்டனை தர இயலாது. மனநல மருத்துவருக்குப் பரிந்துரைக்கிறேன்” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
“என் நாயை வன்புணர்ந்தவனுக்கு விடுதலையா? இனி
இந்த நாட்டில் நாய்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்” என்று கதறினான் நாய் ஓனர்.
குற்றவாளியும் அவன் வக்கீலும் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டார்கள்.
தனது மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விடப்பட்ட அவனைப் பரிசோதித்தார் டாக்டர். அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்வதைவிட அங்கு ஓரமாக அமர்ந்திருந்த அவரது செல்ல நாயைத்தான் அவன் தனது நாக்கு தொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இதோ வருகிறேன்” என்று அவனை அறையிலேயே விட்டுவிட்டு தன் நர்ஸுடன் வெளியேறினார் டாக்டர்.
“ஐயோ! உங்க நாய்! அவன் கேஸு உங்களுக்குத் தெரியாதா?” என்று அவரிடம் பதறித் துடித்தாள் நர்ஸ்.
“அது ஒன்றும் பிரச்சினையில்லை. நான் கண்டுபிடிச்ச ஊசியை என் செல்லத்துக்குப் போட்டிருக்கிறேன்” என்றார் டாக்டர் அலட்சியமாக.
“கர்ப்பத் தடை ஊசியா?”
“சேச்சே! யாராவது அதோட மர்ம உறுப்பைத் தொட்டால் அது தொட்டவங்களோட உறுப்பை கடிச்சுத் துப்பிடும்.”
அப்பொழுது மருத்துவமனை இடிந்துவிடும் அளவிற்கு அறையிலிருந்து அவன் அலறினான், “ஆஆஆ!”
முற்றும்
கதைத் தயாரிப்பில் உதவி: http://tamil.oneindia.com/news/international/man-arrested-seeking-sex-with-farm-animals-238655.html
#குட்டிக் கதை