முதலாவது:- அல்லாஹ் அல்லாமல் வேறாக அழைக்கப்படுபவர்கள் எஜமானராயிருத்தல் வேண்டும்; அல்லது அன்னவர் அதிகாரிகளா யிருத்தல் வேண்டும்.
2-வது: அதிகார மற்றவராகவும் எஜமானரல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3-வது: அல்லாஹ்வுக்கு உதவியாளர்களாய் இருத்தல் வேண்டும்.
4-வது: ஆண்டவனிடம் கேட்பவராகவும் ஸிபாரிஷ் செய்பவராகவும் மன்றாட்டம் புரிபவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆனால், மேற்கூறப்பட்ட நான்கு வகைகளுள் முந்தியிருக்கும் மூன்றும் யாருக்கும் தகுதியல்ல வென்பதை நீங்கள் நன்குணர்ந்திருப்பீர்கள். நான்காம் விதத்தின்படி நன்மை விளைவதும் பாபங்கள் பொறுக்கப்படுவதும் அல்லாஹ்வின் நாட்டமும் அவனது உத்தரவும் அவனது கருணையும் உண்டானதன் பின்னேயாம். ஆனால், அவனுடைய நாட்டமின்றியும் பிரீதியின்றியும் அனுமதியின்றியும் பொருத்தமின்றியும் யாரும் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ சன்மார்க்க சீலர்களாகவோ ஆய்விடல் முடியாது. எனவே, ஏக நாயகனான அல்லாஹ்வின் பிரீதியையும் பொருத்தத்தையும் சந்தோஷத்தையும் முதன் முதலாய் அடைவான் வேண்டி அவனது ஆணைக்க முற்றிலும் ஒற்றுமையாய் நடந்துவர முயற்சி செய்தல் வேண்டும். அதன் பிறகே நாம் உண்மையில் நல்லவர்களாய் நின்றிலங்குவது சாலும். ஆதலின், இந்த நான்காம் விதத்தைக் குறித்து ஆண்டவன் தன்னுடைய திருமறையில் என்ன எச்சரிக்கை செய்திருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிப்பீர்களாக:-
“அவனது (அல்லாஹ்வின்) அனுமதியின்றி அவன் சமுகத்தில் யாரே ஸிபாரிஷ் செய்பவர்?” (குர்ஆன், 2:255).
“வான லோகங்களிலும் (பூலோகத்திலும்) எவ்வளவோ மலக்குக ளிருக்கின்றனர். ஆனால். எதுவரை ஆண்டவனது பொருத்தமும் உத்தரவும் மன்னிப்பும் கிடைக்கமாட்டாவோ, அதுவரை அவர்களுடைய மன்றாட்டமும் ஸிபாரிஷும் ஒரு பிரயோஜனத்தையம் தரமாட்டா-” (குர்ஆன், 53:26).
“ஆண்டவனைத் தவிர்த்து ஏனையவர்களை ஸிபாரிஷ் செய்பவர்களென்றாா பற்றிக் கொண்டிருக்கின்றனர்? (நபியே!) அவர்கள் எந்த விதத்தின் மீதும் ஆதிக்ய மற்றவர்களாகவும் சுயமே ஒன்றையும் அறியாதவர்களாகவு மிருக்கும் நிலைமையிலிருக்கின்றனர், என்று சொல்வீராக-” (குர்ஆன், 39:43).
“அல்லாஹ் அவனாயிருக்கிறான். (எவனெனின், அவன்) வான லோகங்களையும் பூலோகத்தையும் ஆறு காலங்களில் சிருஷ்டி செய்தான். பிறகு அர்ஷின்மீது மிகப்புடையவனாயிருக்கிறான். உங்களுக்கு அவனைத் தவிர வேறெந்த உதவியாளரும் ஸிபாரிஷ் செய்வரும் கிடையார். (இந்த) உபதேசத்தை நீங்கள் அடையமாட்டீர்களா?” (குர்ஆன், 32:4).
“(ஏ நபியே!) தங்களது ரப்பினிடம் எழுப்பப்படுவோம் என்று அஞ்சுகின்ற அவர்களுக்கு (அது சமயம்) ஆண்டவனைத் தவிர எந்த உதவியாளரும் ஸிபாரிஷ் செய்பவரும் இல்லையென்பதை இந்தக் குர்ஆனின் வாயிலாய் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக-” (குர்ஆன், 6:61).
“அல்லாஹ்வினால் வேதமும் ஞானமும் நபித்துவமும் கொடுக்கப்பட்ட அம் மனிதர், பிறகு (மனிதர்களை நோக்கி) அல்லாஹ்வைத் தவிர்த்து எனக்கு வணக்கம் புரிபவர்களாய் (அடியார்களாய்) ஆய்விடுங்கள் என்று கூறுவது தகாது. ஆனால். (அவர்) நீங்கள் வேதத்தை அறிந்தவர்களாயிருக்கிறதனாலும் அதைக் கற்றுக் கொடுப்பவர்களா யிருக்கின்றதனாலும் ஆண்டவனைச் சார்ந்தவர்களாய் (அவனுடைய பக்தர்களாய்) ஆய்விடுங்கள், என்று சொல்வார். மேலும் நபிமார்களையும் மலக்குகளையும் ரப்புகளாய் (ஆண்டவனாய்) நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டுமென உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் (பரிசுத்த) முஸ்லிம்க ளானதன்பின் நீங்கள் மாறு செய்யவேண்டு மென்றா ஏவுகின்றார்?” (குர்ஆன், 3:78, 79).
ஆதலின், இறுதியில் காட்டப்பட்ட ஆண்டவனது வாககியத்தைச் சிறிது நாம் கவனித்தல் வேண்டும். நபிமார்களையும் மலக்குகளையும் ரப்புகளாய்ப் பற்றிக் கொண்டவர்கள் காபிர்களென ஆண்டவனே தீர்ப்புச் செய்திருக்கின்றான். எனவே, இவர்களைத் தவிர்த்து மஷாயிக் முதலியவர்களை ரப்பே போல் எண்ணுகிறவர்களின் நிலைமை என்னவாகும்? இவர்கள் ஆண்டவனுக்கு மாறுபாடு செய்கின்றவர்கள் என்னும் நாமத்தினின்று எப்படி விடுதலையடைய முடியும்?
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>