ஆண்டவனால் வெளியாக்கப்பட்ட வேதங்கள், அவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் (திருத் தூதர்களின்) உண்மையான கருத்துக்கள் ஆகியவை என்ன கூறுகின்றனவெனின், இப் பூவுலகில் ஏக நாயகனான அவ்வாண்டவனுக்கே எல்லா வணக்கமும்
நடைபெறல் வெண்டுமென்பதே யாம். அவனிடமே உதவியனைத்தும் தேடப்படல் வேண்டும்; அவன்மீதே பரிபூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும்; பிரயோஜனத்தைக் கொடுப்பதற்கும் கஷ்டங்களைப் போக்குவதற்கும் அவனையே வேண்டிக்கொள்ளல் வேண்டும் என்பனவுமேயாம். இதனையேதான் எம் ஆண்டவன் தன் திருமறையில் கூறுகின்றான்:–
“இவ்வேதம் திராணியுள்ளவனம் மேலானவனுமான அல்லாஹ்வினின்றும் கொடுக்கப்பட்டதாய் இருக்கிறது. ஏ நபியே! (நிச்சயமாகவே) உண்மையான வெதத்தை உமக்கு நாம்தாம் அளித்துள்ளோம். எனவே, மார்க்கம் அவனுக்குரியதென்பதை உணர்ந்து, பரிசுத்தமாய் அல்லாஹ்வுக்கு வணக்கம் புரிவீராக. பரிசுத்தமாய் வணங்குவதற்குரியவன் ஆண்டவனல்லவா? மேலும் அவனைத் தவிர்த்து மற்றவர்களை எஜமான்களாகக் கொள்ளுபவர்கள் (சொல்லுகின்றனர்:) அல்லாஹ்வின் சமீபமாய் எங்களைக் கொண்டு சேர்க்க ஒரு பொருட்டாய் இருக்கின்றதற்கல்லாமல் (வேறெதற்காகவும்) அவர்களை நாம் வணங்குவதில்லை. நிச்சயமாகவே அல்லாஹ் அவர்கள் விகற்பம் செய்துகொள்ளும் அவ் விஷயத்தில் தீர்ப்புச் செய்பவனாயிருக்கிறான்” (குர்ஆன், 39: 1,2,3).
“மேலும் மஸ்ஜித்கள் (ஆலயங்கள்) அல்லாஹ்வின் வணக்கத்திற்கு உரியனவாகும். ஆதலால், அங்கு அல்லாஹ்வுடன் மற்றவரையும் அழைக்காதீர்கள்” (குர்ஆன், 72: 18).
“ஏ நபியே! என்னுடைய அண்டவன் நன்மையைச் செய்யும்படியாக உத்தரவு செய்திருக்கிறான். எனவே, ஒவ்வொரு வணக்கத்திடத்தும் அவனையே முன்னோக்கி நிற்பீர்களாக. வணக்கம் புரியும்போது பரிசுத்தமானவர்களாய் அவனையே அழைப்பீர்களாக என்று சொல்லுக” (குர்ஆன், 7: 29).
“(ஏ நபியே!) அல்லாஹ் அல்லாதவர்காளன யார் உங்களின் கோரிக்கையைத் தீர்ப்பவர்கள் என்று எண்ணுகின்றீர்களோ (அவர்கள்) உங்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும் மாட்டார்கள்; அவற்றை மாற்றிவிடவும் மாட்டார்கள். இவர்கள் அழைக்கும்படியான அவர்களே ஆண்டவன் சமீபத்தை யடைந்தவர்கள் யார் என்று தேடுகின்றனர். மேலும் அவனது அருளை விரும்புகின்றனர்; அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். நிச்சயமாகவே உமது ரப்பின் வேதனை அஞ்சக்கூடியதாகவே இருக்கிறது” (குர்ஆன், 17: 56, 57).
சலஃபெ சாலிஹீன்களான முன்னோர்கள் சிலர் கூறுகின்றனர்:– சில மனிதர்கள் மஸீஹ், உஜைர், மலாயிகத்துகள் முதலியவர்களை ஆண்டவனேபோல் எண்ணி அழைத்துக் கொண்டிருந்தனர்; இதனால்தான் எமதாண்டவன், ‘நீங்கள் அழைக்கும்படியான அன்னவர்களம் உங்களைப்போல் என்னடைய அடியார்களாகவே இருக்கின்றனர். உங்களைப்போல் அவர்களும் என்னுடைய அருளை வேண்டியும் என்னடைய தண்டனைக்கு அஞ்சியும் வருகின்றனர். நீங்கள் எப்படி ஆண்டவனுக்கு அடுத்தவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களோ, அப்படியே அவர்களும் ஆண்டவனக்குச் சமீபமானவர்களாய் இருக்கு வேண்டுமென விரும்புகின்றனர்’ என்று கூறி, அவர்களின் தவறுதலான உள் எண்ணத்தைக் கண்டித்திருக்கிறான். ஆதலால் அன்பியா, மலாயிகத்து முதலியவர்களை விளித்தவர்களே இம்மாதிரியான முறையில் கண்டனம் செய்யப்படுகின்றனரென்றால், அன்பியாக்களின், இல்லை, மலக்குகளின் உச்சஸ்தானமான உயர்வை அடைய முடியாத அப்படிப்பட்டவர்களை அழைத்துத் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள நாடுவார்களாயின், இவர்கள் எந்தவிதமாய் அச்சமுறுத்தப்படுவார்கள் என்பதை நீங்களே சிறிது சிந்தனை செய்து பாருங்கள். இதற்காக அல்லாஹ் என்ன எச்சரிக்கை செய்கின்றான் என்பதையும் சிறிது கவனியுங்கள்:–
“மாறு செய்த அம்மனிதர்க்ள என்னையல்லாமல் என்னுடைய அடியார்களை உதவியாளர்களாய் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நிச்சயமாகவே நாம் மாறு செய்தவர்களுக்கு ஜஹன்னத்தை (நரகத்தை)த் தங்குமிடமாகத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்” (குர்ஆன் 18: 102).
“ஏ நபியே! அல்லாஹ் அல்லாதவர்களான (ஏனையவரகளை உதவியாளர்களென்று) அவர்களை எண்ணி அழையுங்கள்; (ஆனால்) அன்னவர்கள் வானலோகங்களிலும் பூலோகத்திலும் ஓர் அணுப்பிரமாணமான அதிகாரத்தையும் பெற்றவர்களல்லர். மேலும் இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தவிதமான கூட்டும் கிடையாது. மேலும் அதில் அன்னவர்களுக்கு உதவி செய்பவர் ஒருவரும் கிடையார். மேலும் அல்லாஹ் அனுமதித்த ஒரு சிலருக்கேயன்றி ஆண்டவனிடம் எந்த ஸிபாரிஷும் பிரயோஜனம் கொடுக்க மாட்டாது” (குர்ஆன் 34: 22, 23).
எனவே, இதுவரை மேலே காட்டிவந்த ஆண்டவனுடைய திவ்வியக் கட்டளைகளால் நாம் தெரிந்து கொள்ளவேண்டுவதென்ன என்பதை மாத்திரம் சிறிது தங்கள் புத்தியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பாருங்கள். மனிதர்கள் தங்கள் அறியாத் தன்மையால் அல்லாஹ்வை விட்டு விட்டு மலக்குகளையோ, இல்லை, மனிதர்களையோ அழைத்துத் தங்களுடைய கோரிக்கைகளைக் கோருகின்றனர். ஆனால், இவர்கள் அழைக்கும்படியான அந்த மலக்குகளும் மனிதர்களும் வான லோகங்களிலாகட்டும், இல்லை, பூலோகத்திலாகட்டும் ஒரு சிறு அணுப் பிரமாணத்தின் மீதேனும் சுயமே ஆதிக்யம் செலுத்துபவர்களாய் இல்லை. இன்னம் ஆண்டவனுடைய அதிகாரத்தில் இவர்களுக்கு எந்த விதமான கூட்டும் இணையும் கிடையா. ஆனால், மேலே சொல்லப்பட்ட இவைகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் எஜமானாகவும் சொந்தக்காரனாகவும் இருப்பவன் அந்த ஏகபராபரனான அல்லாஹுத்தஆலாவே ஆவான். அவன்தான் சகல வஸ்துக்களின் மீதும் பூரண ஆதிக்யமும் பரிபூரணத் திராணியும் உடையவனாய் இருக்கிறான். மேலும் இவ்வுலகின்கண் காணக்கிடக்கும் அரசர்களுக்கு அமைச்சர்களும் அடிமை வேலைக்காரர்களும் இருந்துவர வேண்டுவது அத்தியாவசியமாய் இருப்பதே போல், எமது ஆண்டவனான அந்த ஏக நாயகனுக்கு எந்த விதமான இணையும் துணையும் உதவியும் வேண்டுவது அவசியமன்று. இதுவே குர்ஆன் ஷரீபின் கூற்றுமாகும்.
இம்மாதிரியான தேவைகளினின்றும் விடுபட்டு அவன் மேலானவனாய் இருக்கிறான். இது மட்டுமா? அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் அவனது அனுமதியைப் பெற்றும் இருக்கும்படியான ஒரு சிலருக்கேயன்றி அவனிடம் வேறு யாருக்கும் எந்தவிதமான ஸிபாரிஷும் ஒரு சிறிதும் பிரயோஜனத்தைக் கொடுக்கமாட்டாது என்பது திண்ணம். ஆதலால், எம்மாதிரியான தேவையாயினும், ஆண்டவனிடமே கோரி, அவனிடமிருந்தே உண்மையில் பிரயோஜனத்தைப் பெறப் பிரயாசை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஆண்டவனல்லாத ஏனையவர்களிடம் நீங்கள் உங்குளுடைய கோரிக்கைகளைக் கேட்பது கூடாது.
<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>
{jcomments off}