அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னை கார்டியன் பிரஸில் இதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதன் அன்றைய விலை அணா 4.
அதன் பிறகு இந்த நூல் மறுபிரசும் கண்டதா, வேறு ஏதேனும் இதழ்களில் மீள் பிரசுரம் ஆனதா எனத் தெரியவில்லை. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் ஜவாத் மரைக்கார் இந்த நூலின் PDF பிரதியை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும் உரித்தாவன. அந்த பிரதி அப்படியே பகிரத்தக்கதே. எனினும், சமகால வாசகர்கள் வாசிப்பதற்கு ஏற்ப இந்த ஆக்கத்தை மீள் உருவாக்கி PDF வடிவாக்கியுள்ளேன். இதை அப்படியே நகலெடுத்து Print on Demand வகையில் அச்சிட்டு வினியோகம் செய்வது எளிது.
இந்நூலை தரவிறக்கவும், பகிரவும் முழு அனுமதியுண்டு. இலாப நோக்கமின்றி யார் வேண்டுமானாலும் அச்சிட்டு வெளியிடலாம். ஆனால் அனைத்திலும் ஆசிரியரின் பெயரும் darulIslamFamily.com வலைத்தள சுட்டியும் குறிப்பிடப்பட வேண்டும்.
இதே வகையில் பா. தாவூத்ஷா ஸாஹிப் அவர்களின் இதர நூல்களை வெளியிடும் திட்டம் உள்ளது. இன்ஷா அல்லாஹ். வாசகர்கள் இதிலுள்ள நிறை-குறைகளை கீழுள்ள மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டால் இனிவரும் ஆக்கங்களில் அவற்றைக் கருத்தில் கொள்ள முடியும்.
எல்லாப் புகழும் பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே.
-நூருத்தீன்