தமிழன் தொலைக்காட்சியில் ‘முன்னோர்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆளுமைகளின் தொடர் வெளியாகிறது. அவ் வரிசையில் பிப்ரவரி 21, 2019 நிகழ்வில் தாருல் இஸ்லாம் ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்களைப் பற்றி விரிவான பேட்டி அளித்துள்ளார் எழுத்தாளர் புதுமடம் ஹலீம். இன்றைய தலைமுறையினர் பா. தாவூத்ஷா (1885-1969) அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான காணொளி இது.
இந்நிகழ்ச்சியைத் தயாரித்த தமிழன் தொலைகாட்சியினருக்கும் சகோதரர் புதுமடம் ஹலீம் அவர்களுக்கும் இதன் விபரங்களை எனக்கு அனுப்பிவைத்த சகோ. V.S. முஹம்மது அமீன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
-நூருத்தீன்