இந்தியா சென்றிருந்தபோது மே 18, 2022 அன்று நாச்சியார்கோவிலில் உள்ள அல்அமானத் பைத்துல்மால் சென்றிருந்தேன். அங்கு சகோதரர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாருல் இஸ்லாம் பா. தாவூத்ஷா’ அவர்களின் பூர்விகமான அந்த ஊரில் அவர்களை நினைவுகூரும் வகையில் ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.
அதன் விளைவாக திருநறையூர்-நாச்சியார்கோவிலில் ஒரு தெருவுக்கு பா. தாவூத்ஷா அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது. திருநறையூரிலிருந்து சகோ. நூருல் அமீன் டிசம்பர் 14, 2022 அன்று தகவல் அனுப்பியிருந்தார். அவருக்கும் இம்முயற்சியை மேற்கொண்ட சகோதரர்களுக்கும் தாருல் இஸ்லாம் குடும்பத்தாரின் அன்பும் நன்றியும் துஆவும்.
-நூருத்தீன்