“நான் சிறுவயதினனாக இருந்த போது ஒரு கையில் குடியரசு இதழையும், இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் வைத்து வலம் வந்தேன்”
“என்னுள் சிந்தனை மாற்றத்தை உருவாக்கியதில் தந்தை பெரியார் போல பா. தாவூத்ஷா அவர்களுக்கும் பங்குண்டு”
என்று தம் தந்தை டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அடிக்கடி நினைவுகூர்வார் என்று ஜனவரி 6, 2021 நிகழ்ந்த இதயங்களை இணைப்போம் மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.
அறிவுச் சுடர்களாக திகழ்ந்த பல ஆளுமைகளில் பா. தாவூத்ஷா அவர்களும் ஒருவர். அவர்கள் ஏந்திய அறிவுத் தீபம் பின் வந்த தலைமுறையினருக்கும் கையளிக்கப் பட வேண்டும். சிந்தனை உலகுக்கு, சிறுபான்மைச் சமுதாயத்தின் பங்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
அறிஞர் பா. தாவூத்ஷா அவர்களின் பெயரால், கல்வி விருதுகள் அறிவிக்கப்பட்டு அரசின் சார்பாக வழங்கப்பட வழிவகை செய்ய வேண்டும் என்று கோருகிறேன்.
-அதிரை ஷஃபாத்