பா. தாவூத்ஷாவின் குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணி முதன் முதல் துவங்கியது.
1924 – 1926 (ஹிஜ்ரி 1342 – 1344)
“ஜவாஹிருல் புர்க்கான்” முதலாவது வெளியானது. முதல் இரண்டு ஜுஸ்உக்களின் தமிழ் மொழிபெயர்ப்பும் விரிவான வியாக்யானமும் அரபு மூல வரிகளுடன் சரளமான தமிழ் நடையில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் அல்குர்ஆனின் 2-ஆம் சூரா 159-ஆம் ஆயத் வரை உள்ளது.
5.12.1926
“ஜவாஹிருல் புர்க்கான்” இரண்டாவது வெளியானது. அம்மயத் – முப்பதாவது ஜுஸ்உவின் விரிவான வியாக்யானம்.
30.5.1931
“ஜவாஹிருல் புர்க்கான்” – அம்மயத் – முப்பதாவது ஜுஸ்உவின் விரிவான வியாக்யானம் மறுபதிப்பு வெளியானது.
1938
குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு – மூன்றாவது. முதல் மூன்று சூராக்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
3-8-1944 முதல் 28-2-1947 வரை
மௌலானா முஹம்மதலீயின் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பை தமிழில் மொழிபெயர்த்தது. (இது கையெழுத்துப் பிரதி மட்டுமே. அச்சாகவில்லை)
1955 to 1961
பா. தாவூத்ஷா தமக்கு 70 வயது முடிந்த பின் (தோராயமாக 1955 ஆம் ஆண்டு) தம் மைந்தர் N.B. அப்துல் ஜப்பாருடன் இணைந்து புதுமுறையாக ஆதிமுதல் அந்தம்வரை குர்ஆனுக்குப் பொருளுரையும் விரிவுரையும் எழுத ஆரம்பித்தார். 6 ஆண்டுகள் செலவிட்டு 1961ஆம் ஆண்டு அதை எழுதி முடித்தார். அதுவே அச்சு வடிவம் கண்ட “குர்ஆன் மஜீத் – பொருளுரையும், விரிவுரையும்”. மொத்தம் ஏழு பாகங்கள். அவற்றுள் ஆறு பாகங்கள் மட்டுமே அச்சாகி வெளிவந்தன. முதல் பாகம் அச்சாகி வெளியான ஆண்டு 1964. ஐந்தாம் பாகம் 1967 வெளியானது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் உதவியுடன் ஆறாவது பாகம் வெளியிடப்பட்டது. எனினும், முஸ்லிம்களின் எதிர்ப்பின் காரணமாக அப்பிரதிகள் விநியோகிக்கப்படாமல் இருந்தன. அப்போதைய பொது நூலகத் தலைவர் எம்.பி. சிவஞானம் அவற்றைப் பொது நூலகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.