1919 இல் பா. தாவூத் ஷா அவர்களால் தொடங்கப்பட்ட ‘தத்துவ இஸ்லாம்’ என்ற இதழ், 1923 இல் ‘தாருல் இஸ்லாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்க்க சிந்தனைகளைத் தாண்டி தமிழ் ஆர்வம், கல்வி விழிப்புணர்வு, அரசியல் கருத்துகள் என கலவையாக அவ்விதழ் வெளியானது.
“திருவாரூர் வீதிகளில் ஒரு கையில் பச்சைப் பிறைக்கொடியையும், மறுகையில் ‘தாருல் இஸ்லாம்’ இதழையும் ஏந்தியவாறு என் பொதுவாழ்வைத் தொடங்கினேன்” என்று கலைஞரால் இப்போதும் நினைவுகூரப்படும் சிறப்புக்குரிய இதழ் அது.
…
ஆனந்த விகடனின் தொடக்க ஆண்டுகளில், அதன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். விகடனின் வளர்ச்சிக்காக தமது சிந்தனைகளைத் தந்த மூன்று முஸ்லிம் இதழியல் முன்னோடிகளுக்கு நன்றி சொல்லும் குறிப்பு அது. பா. தாவூத் ஷா, ஏ.என். முகமது யூசுப் பாக்கவி, டி.ஆர்.எப். மஆலி சாகிப் ஆகியோரே அந்த மூவர். அவர்களுக்கு வாரம்தோறும் அன்பளிப்புப் பிரதிகளையும் அனுப்பி வைத்துள்ளது விகடன்.
(விகடன் விருது: அங்கீகாரம் சமநிலைக்கு மட்டுமல்ல; சமுதாயத்திற்கும் தான்! – ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)
நன்றி: சமநிலைச் சமுதாயம், பிப்ரவரி 2013
தொடர்புடைய சுட்டிகள்:
கலைஞர் கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தாவூத் ஷா