முஹம்மது நபி (ஸல்) வரலாறு – கட்டுரைப் போட்டி முடிவுகள்

by admin

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாறு – கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்து. பெரும் ஆர்வத்துடன் பதினைந்து பேர் கலந்துகொண்டு கட்டுரைகள் அனுப்பி வைத்திருந்தனர்.

கணினி வசதி இல்லாதபோதும் சிலர் செல்ஃபோனில் தட்டச்சு செய்தும் பலர் கையால் எழுதி, ஸ்கேன் செய்தும் அனுப்பியிருந்தனர். அவர்களது ஆர்வமும் முனைப்பும் பெரும் வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது. வேறு சிலர் அறிவிப்பை தாமதமாகக் கவனித்துவிட்டு விசாரித்திருந்தனர். காலம் கடந்துவிட்டதால் அவர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற இயலவில்லை. அது வருத்தமே.

கட்டுரைகள் அனைத்தையும் “நபி (ஸல்) வரலாறு“ நூலின் ஆசிரியர், மதிப்பிற்குரிய அண்ணன் அதிரை அஹ்மத் அவர்களுக்கு அப்படியே அனுப்பிவிட்டேன். (என் குறுக்கீடும் சார்பும் இருக்கக்கூடாது என்பதால் அவற்றை அவர்கள் மதிப்பீடு செய்து முடிவுகளை அறிவிக்கும்வரை எதையும் வாசிப்பதில்லை என்பது என் முடிவு.) பயணத்தில் இருந்தபோதும் கணிசமான நேரத்தைச் செலவிட்டு அனைத்தையும் பொறுமையாக வாசித்து, முடிவுகளை அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற கட்டுரையாளர்களின் தேர்வு எளிதாக இருந்திருக்கிறது. அதற்கு அடுத்து ஆறு கட்டுரைகள் ஒரே மதிப்பெண்ணில் அமைந்திருந்ததால் அண்ணன் அதிரை அஹ்மது குலுக்கல் முறையில் அவர்களுள் ஒருவரை மூன்றாம் இடத்திற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மூவருக்கும் தலா ரூ.1000 பெறுமானமுள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் “நபி (ஸல்) வரலாறு நம் பிள்ளைகளுக்கு” என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

https://www.commonfolks.in/ ஆன்லைன் நிறுவனம் மூலமாக அவர்கள் அனைவரும் தங்களுக்கான நூல்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபெற்றவர்கள் +917550174762 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களது பெயரையும் விலாசத்தையும் தெரிவித்து நூல்களைப் பெற்றுக்கொள்ளவும்.

ரூ.1000 பரிசு வென்றவர்கள், “நபி (ஸல்) வரலாறு நம் பிள்ளைகளுக்கு” என்ற நூலையும் மீதமுள்ள தொகைக்கு தங்களுக்குப் பிடித்தமான நூல்களையும் ஆர்டர் செய்யவும்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்:

 • Syed Feroze Dowla – First Place
 • Irfan Begum A. – Second Place
 • Murshida M. – Third Place

ஆறுதல் பரிசு பெறுவோர்:

 • Aabitha Nasrin M.
 • Aasiya
 • Aysha Shakin A.
 • Hassana Begam M.
 • Starjan Sheik
 • Farhana S
 • Jarina Jamal
 • Riswana Parveen J
 • Iman Nachiya
 • Mohamed Alim
 • Rinos Thaslima J
 • Shakila Banu J

இன்ஷா அல்லாஹ் அனைத்து கட்டுரைகளும் ஒவ்வொன்றாக www.darulislamfamily.com இணையதளத்தில் பதிவாகும். பின்னர் அவை அனைத்தும் PDF நூலாகத் தொகுக்கப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்படும்.

கட்டுரைகளை வாசித்து மதிப்பிட்டுத் தந்த அண்ணன் அதிரை அஹ்மது அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தாம் ஆசிரியராக உள்ள அல்-மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் பங்கு பெற உதவியும் ஒத்தாசையும் புரிந்த அண்ணன் இப்ராஹீம் அன்ஸாரி அவர்களுக்கு நன்றி.

ஆர்வமுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பயில, அறிய ஊக்கப்படுத்தும் சிறு முயற்சியாகவே இக்கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. அந்த நோக்கம் ஈடேறும் என்பது என் நம்பிக்கை.

நம் அனைவரின் பிழை பொறுத்து நமது நல் அமல்களை ஏற்றுக்கொள்ள அல்லாஹ் போதுமானவன். என்றென்றும் அவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக.

Related Articles

Leave a Comment