ரமளான் 1438 – போட்டி முடிவுகள்

by admin

வாசகர்கள் தங்களது பங்களிப்பின் மூலம் இப் போட்டியைச் சிறப்பித்துத் தள்ளிவிட்டார்கள். அவர்களது ஆர்வமும் பங்களிப்பும் எங்களது எதிர்பார்ப்பை மீறி அமைந்து, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ரமளான் சிறப்புப் போட்டி என்று அறிவித்துவிட்டாலும் ரமளான் காலத்தில் இதற்கு நேரம் செலவழிக்க அவர்களுக்கு இயலுமோ என்ற சந்தேகத்தில் விடைகளை அனுப்ப வேண்டிய அவகாசத்தை ரமளானுக்குப் பிறகு ஒரு வாரம்வரை இருக்கும்படி அமைத்திருந்தோம். அதற்கேற்ப, நோன்பு மாதத்தில் சிறு அளவில் மட்டுமே வந்த விடைகள், பெருநாளுக்குப் பிறகு மளமளவென்று வந்து குவிந்துவிட்டன.

நாங்கள் அறிவித்திருந்த பரிசு தொகை பிரமாதமானதன்று. அடிப்படை நோக்கமானது நபித் தோழர்களான சஹாபாக்களின் புனித வரலாற்றை மேலும் பலர் வாசிக்க வேண்டும், அறிய வேண்டும், அதை ஊக்கப்படுத்த சிறு பரிசு அளிக்க வேண்டும் என்பதே. அதை வாசகர்கள் மிகச் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை அவர்கள் அனுப்பிய மடல்களில் இருந்த கருத்தும் துஆவும் அப்பட்டமாய்த் தெரிவித்தன.

“இப்படி ஒரு போட்டி வைத்து எங்களை இந்த விலைமதிக்க முடியா பொக்கிஷங்களை படிக்க வைக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்… என் விடை சரியாக இருந்தாலும் பரிசு பட்டியலில் சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒரு மடல். அதற்காக இந்த வாசகரை பரிசுத் தேர்விலிருந்து நீக்கிவிட முடியுமா என்ன? அனைத்து விடைகளையும் சரியாக எழுதியிருந்த அவரது கோரிக்கையை உரிமையுடன் நிராகரித்து, பட்டியலில் சேர்த்துவிட்டோம்.

மின்னஞ்சல் ஐடி இல்லாத வாசகர் ஒருவர் தாளில் கைப்பட விடைகளை எழுதி, ஸ்கேன் செய்து தம் அண்ணனின் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திருந்தார். தட்டச்சு சோம்பல் பரவியுள்ள குறுவார்த்தை சோஷியல் மீடியா காலத்தில் இப்படியான ஆர்வம் கைதட்டி வரவேற்கப்பட வேண்டிய விஷயம். உவகை கொள்கிறோம்.

கணினியும் இணையமும் கிடைக்காமல் அலைந்து, திரிந்து இறுதியில் ஒரு நண்பனின் வீட்டிலிருந்து கடைசி நேரத்தில் விடைகளை அனுப்பி வைத்திருந்தார் மற்றொரு வாசகர். விடைகள் கிடைக்கத் தாமதமாகி எங்கே தாம் போட்டியிலிருந்து நிராகரிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை அவரது மடல் தெரிவித்தது. அதைப்போல் குடும்பச் சூழல், நோன்பு காரணமாக கடைசி நேரத்தில் பரக்க, பரக்க வந்தடைந்த விடைகள் பல. கடிகாரத்தின் நொடி முள்ளா கணக்கு? நோக்கம்தானே பிரதானம்? அவர்களது விடைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உறவினர் வட்டத்திற்குள் குழுமம் அமைத்து தோழர்கள், தோழியர் தொடரிலிருந்து வரலாறைப் பகிரும் தொடர் நிகழ்வொன்றை வாசகர் ஒருவர் நடத்தி வருகிறாராம். அவர் இந்தப் போட்டியில் பங்கு பெற்றதோடு நில்லாமல், தம் உறவினர்களையும் பங்கு பெறச் செய்திருக்கிறார். மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களிடம் விடைகளைப் பெற்றுத் தொகுத்து அவர்களது சார்பாக தாமே அனுப்பியும் வைத்திருந்தார். இத்தகு மெனக்கெடல்களை சிலாகிக்காமல் விட முடியுமா?

வெறுமே விடைகளை எழுதாமல், அச்சுக்கு செல்வதுபோல் அவற்றை வடிவமைத்து நேர்த்தியான PDF கோப்புகளாக்கி சிலர் அனுப்பி வைத்திருந்தனர். அவர்களின் ஈடுபாடும் செய்நேர்த்தியும் ஆச்சரியப்படுத்தின.

சில மடல்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்து தொற்று நோயாய் எங்களையும் தாக்கியது. மொத்தத்தில் பேரனுபவமாய் இந்தப் போட்டி அமைந்தது அவன் கருணை.

0-0-0

போட்டியில் அறிவிக்கப்பட்ட வினாக்களும் அதற்குரிய விடைகளும்

வினா – 1

மெய் ஞானத்தைத் தேடி ஊர் ஊராக / நாடு நாடாக பயணம் மேற்கொண்ட தோழர் யார்? என்னென்ன ஊர்களை/நாடுகளை அவர் கடந்தார்? முஸ்லிம்கள் அறிந்திராத தற்காப்பு முறையை நபியவர்களுக்கு அவர் முன்மொழிந்த போர் எது?

விடை:

வினா – 2

முஸைலமாவால் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நபித் தோழர் யார்? இவருடைய வரலாற்றில் தங்களை ஈர்த்த பகுதி எது?

விடை:

வினா – 3

மரணமடைந்ததும் வானவர்களால் உடல் கழுவி, குளிப்பாட்டப்பட்ட நபித் தோழர் யார்? அவர் அவ்விதம் குளிப்பாட்டப்பட்டது ஏன்?

விடை:

  • ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ (ரலி).
  • திருமணமாகி புது மனைவியுடன் தாம்பத்யத்தில் ஈடுபட்டு, குளிக்கவும் அவகாசமின்றிப் போருக்கு விரைந்து வந்து உயிர் தியாகியாகியிருந்தார் ஹன்ளலா (ரலி).

வினா – 4

மரணத்திற்கான ஒப்பனை பூசிக்கொண்டு போருக்குச் சென்ற நபித் தோழர் யார்? அது எந்தப் போர்? நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று இவர் வருந்திய நிகழ்வு எது?

விடை:

  • தாபித் பின் கைஸ் (ரலி).
  • யமாமா போர்.
  • ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் முன்னிலையிலேயே அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) இருவரின் குரல்களும் உயர ஆரம்பித்துவிட்டன. இருவரிடையிலும் இருந்த இணக்கத்தைக் குறைக்கும் விவாதமாக அது உருவாக ஆரம்பித்தது. மேன்மக்களுள் இருவர் தடுமாறிக் கீழே விழவிருந்ததாக வரலாறு அந்நிகழ்வைக் குறிக்கிறது.

தனக்கு உவப்பான இரு அடியார்களின் பிணக்கை அறுத்தெறிவதுபோல் ஒரு வசனத்தை அருளி எச்சரித்தான் இறைவன். அது குர்ஆனில் அல்-ஹுஜுராத் எனும் 49ஆவது அத்தியாயத்தின் இரண்டாவது வசனமாகப் பதிவாகியுள்ளது.

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் நபியின் குரலொலிக்குக் கூடுதலாக உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப்போல், அவரெதிரில் இரைந்து போசாதீர்கள், நீங்கள் இதை உணர்ந்து கொள்ளாவிடின் உங்கள் நற்செயல்களின் நன்மைகள் அழிந்து போகும்”

இயற்கையிலேயே உரத்த குரல்வளம்  அமையப் பெற்றிருந்த தாபித் பின் கைஸ் (ரலி) இந்த இறைவசனத்தால், தாம் தாக்கப்பட்டதாக நினைத்து மருகினார்.

வினா – 5

தமது செல்வத்தையெல்லாம் வீட்டின் ஒரு பகுதியில் திறந்து வைத்துவிட்டு தேவைப்படுவோர் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்த தோழர் யார்? குரைஷிகளின் சித்ரவதைக்கு ஆளான இவரது முதுகில் எத்தகு பாதிப்பு ஏற்பட்டிருந்தது? இறுதி காலத்தில் இவர் எதை நினைத்து அஞ்சி கிடந்தார்?

விடை:

  • கப்பாப் பின் அல்-அரத் (ரலி)
  • சதையை இழந்து முதுகு பொத்தலாகி இருந்தது.
  • தமது நன்மைக்கான கூலி இம்மையிலேயே கிடைத்து விட்டது. மறுமையில் கிடைக்காதோ என்று அஞ்சி கிடந்தார்.

வினா – 6

இத் தொடரின் ஏதேனும் ஒரு தோழரின் வாழ்விலிருந்து தங்களைக் கவர்ந்த, நெகிழ வைத்த பகுதியை நூறு வார்த்தைகளுக்குள் எழுதவும்.

விடை:

ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த தோழரின் அத்தியாயத்திலிருந்து எழுதியிருந்தனர். அவற்றுள் சிறப்பானவற்றின் தொகுப்பு பின்னர் தனி பதிவாக வெளியிடப்படும் – இன்ஷா அல்லாஹ்.

0-0-0

இப் போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை 35.

  1. அப்துர் ரஹீம்
  2. அப்துல் மஜீத்
  3. அப்துல் ஸமது இப்னு காஜா முஹம்மது
  4. அபுல் ஹஸன் R
  5.  அன்புடன் உங்கள் அப்பாஸ்
  6. அஸாருதீன் அப்பாஸ்
  7. ஆஷிகா சுலைமான்
  8. உம்மு அஃப்னான்
  9. உம்மு சுஹஃபா சுஹஃபா
  10. சல்மா
  11. சில்மியா பானு
  12. சுலைமான் K
  13. சுஜிதா முஹைதீன்
  14. சுஹைல் இப்னு அபீ ரய்யான்
  15. தஸ்லிமா
  16. தாஹிர் மஸ்கட்
  17. தாஹிரா பானு
  18. தில்ஷாத் பேகம்
  19. நஃபீஸா
  20. பாத்திமா வஸ்னா
  21. பின்த் இப்ராஹீம்
  22. மதீனா பேகம்
  23. முஹம்மது மீரான்
  24. முஹம்மது ஜமீல் H
  25. யாஸ்மின் பின்த் முஹம்மது அலீ
  26. ரஹீமா ஹாஜா
  27. ரிஸ்வானா பானு
  28. ரிஷாத் ஹஷீனா zy (rishadhashinazy)
  29. ஜரீனா ஜமால்
  30. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
  31. ஷாமிலா நவாப்
  32. ஷிரின் அப்துல் வாஹித்
  33. ஷேக் தாவூத்
  34. ஹிதாயா
  35. ஹுஸைனம்மா

அனைவரும் சரியான விடை எழுதி வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுதல்கள்.

பதினாறு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தோம். ஆனால் ஆர்வமுடன் கலந்துகொண்ட மற்றவர்களை வெறும் பாராட்டுடன் விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. எனவே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த பதினாறு வெற்றியாளர்கள் போக மற்ற பத்தொன்பது பேருக்கும் – 

பரிசாக “ஞான முகில்கள் – 1 இமாம் அபூஹனீஃபா (ரஹ்)” நூலை அளிக்கிறோம். இந் நூலைப் பரிசாகப் பெரும் அவர்கள்:

  1. அப்துல் மஜீத்
  2. அஸாருதீன் அப்பாஸ்
  3. ஆஷிகா சுலைமான்
  4. உம்மு அஃப்னான்
  5. சல்மா
  6. சில்மியா பானு
  7. தஸ்லிமா
  8. தாஹிர் மஸ்கட்
  9. தாஹிரா பானு
  10. தில்ஷாத் பேகம்
  11. பின்த் இப்ராஹீம்
  12. மதீனா பேகம்
  13. யாஸ்மின் பின்த் முஹம்மது அலீ
  14. ரஹீமா ஹாஜா
  15. ரிஷாத் ஹஷீனா zy (rishadhashinazy)
  16. ஷாமிலா நவாப்
  17. ஷிரின் அப்துல் வாஹித்
  18. ஹிதாயா
  19. ஹுஸைனம்மா

₹..250 பரிசுக்குரிய பன்னிரெண்டு வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தோம். அவர்கள்:

  1. அப்துர் ரஹீம்
  2. அப்துல் ஸமது இப்னு காஜா முஹம்மது
  3. அபுல் ஹஸன் R
  4. உம்மு சுஹஃபா சுஹஃபா
  5. சுலைமான் K
  6. சுஜிதா முஹைதீன்
  7. சுஹைல் இப்னு அபீ ரய்யான்
  8. நஃபீஸா
  9. பாத்திமா வஸ்னா
  10. முஹம்மது மீரான்
  11. ரிஸ்வானா பானு
  12. ஜரீனா ஜமால்

₹..500 பரிசுக்குரிய நால்வர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள்:

  1. அன்புடன் உங்கள் அப்பாஸ்
  2. முஹம்மது ஜமீல் H
  3. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
  4. ஷேக் தாவூத்

வெற்றியாளர்கள் தத்தம் பரிசுத் தொகைக்குரிய நூல்களை இக்ரா ஆன்லைனில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் – இன்ஷா அல்லாஹ்.

0-0-0

அறிவித்த நாளாய் குழுமங்களிலும் உறவுகள் மத்தியிலும் நட்பு வட்டத்திலும் இப் போட்டியை அறிமுகப்படுத்தி நாள்தோறும் அவர்களுக்கு நினைவூட்டி ஊக்கப்படுத்திய சகோதர, சகோதரிகள்…

பதிவிற்காக இமேஜ்களை பிரத்தியேக டிஸைன் செய்து அளித்த தம்பி ஹஸன்…

பரிசுக்குரிய புத்தக வினியோகத்திற்கு பொறுப்பேற்ற இக்ரா ஆன்லைன்…

அனைத்திற்கும் மேலாய் இப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த வாசக பெருமக்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே!

0-0-0

தொடர்புடைய பதிவு: ரமளான் 1438 – சிறப்புப் போட்டி

Related Articles

Leave a Comment