ரமளான் 1438 – சிறப்புப் போட்டி

by admin

வாசகர்களுக்கு ரமளான் நல்வாழ்த்துகள். நடைபெறும் ரமளான் (ஹி. 1438) மாதத்தை முன்னிட்டு இச்சிறப்புப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பெரும் சிறப்புக்குரிய இம் மாதத்தில் புனிதர்களான தோழர்களின் வரலாற்றுடன் வாசகர்களைப் பயணிக்க வைப்பதே இப்போட்டியின் நோக்கம்.

நூருத்தீன் எழுதி, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடராக வெளிவந்த தொடர் “தோழர்கள்”. இதன் முதல் இருபது அத்தியாயங்களை உள்ளடக்கி “தோழர்கள் – முதலாம் பாகம்” நூலாகவும் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத் தொடருக்கு சத்தியமார்க்கம்.காம் சுருக்கமாக அளித்துள்ள முன்னுரை:

பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே!

அந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதரர் நூருத்தீன், “தோழர்கள்” எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று நாயகர்களை இன்ஷா அல்லாஹ் அறிமுகப் படுத்தவிருக்கிறார்.

பொதுவாக, வரலாறு என்பது வாசிப்பதற்கு மட்டுமன்று; எடுத்தும் தடுத்தும் வாழ்வதற்கான வழிகாட்டல் நிறையப் பெற்றதே வரலாறு என்பதாகும்.

வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்!

இத் தோழர்கள் தொடரிலிருந்து பரவலாக வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான விடைகளைத் தேடி, குறிப்பிட்ட தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடைகளை அளிக்கும் நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ₹. 500 பெறுமானமுள்ள புத்தகங்கள் அவர்களுக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

திருத்தப்பட்ட புதிய தகவல்: (மே 31, 2017)

நான்கு வெற்றியாளர்களுக்கு தலா ₹. 500 பெறுமானமுள்ள பரிசு என்று முன்னர் அறிவித்திருந்தோம். தாருல் இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவர் அதிகப்படியான பரிசுக்கு பொறுப்பேற்றுள்ளார்.  எனவே பரிசுத் தொகை ₹. 5000 (ஐயாயிரம்) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நான்கு வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ₹. 500 பெறுமானமுள்ள புத்தகங்கள் அளிக்கப்படும்.

மேலும் 12 வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ₹. 250 பெறுமானமுள்ள புத்தகங்கள் அளிக்கப்படும்.

பதினாறு வெற்றியாளர்களுக்கு பரிசு!

இப் போட்டியில் தாங்கள் கலந்துகொள்வது மட்டுமின்றி தங்களது நட்பு வட்டத்திற்கும் இச் செய்தியைப் பகிர்ந்து அவர்களும் கலந்துகொள்ள ஊக்கமளியுங்கள்.

வினாக்கள்:

  1. மெய் ஞானத்தைத் தேடி ஊர் ஊராக / நாடு நாடாக பயணம் மேற்கொண்ட தோழர் யார்? என்னென்ன ஊர்களை/நாடுகளை அவர் கடந்தார்? முஸ்லிம்கள் அறிந்திராத தற்காப்பு முறையை நபியவர்களுக்கு அவர் முன்மொழிந்த போர் எது?
  2. முஸைலமாவால் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட நபித் தோழர் யார்? இவருடைய வரலாற்றில் தங்களை ஈர்த்த பகுதி எது?
  3. மரணமடைந்ததும் வானவர்களால் உடல் கழுவி, குளிப்பாட்டப்பட்ட நபித் தோழர் யார்? அவர் அவ்விதம் குளிப்பாட்டப்பட்டது ஏன்?
  4. மரணத்திற்கான ஒப்பனை பூசிக்கொண்டு போருக்குச் சென்ற நபித் தோழர் யார்? அது எந்தப் போர்? ‘நரக நெருப்பிற்குரிய மக்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று இவர் வருந்திய நிகழ்வு எது?
  5. தமது செல்வத்தையெல்லாம் வீட்டின் ஒரு பகுதியில் திறந்து வைத்துவிட்டு தேவைப்படுவோர் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்த தோழர் யார்? குரைஷிகளின் சித்ரவதைக்கு ஆளான இவரது முதுகில் எத்தகு பாதிப்பு ஏற்பட்டிருந்தது? தமது இறுதி காலத்தில் இவர் எதை நினைத்து அஞ்சிக் கிடந்தார்?
  6. இத் தொடரின் ஏதேனும் ஒரு தோழரின் வாழ்விலிருந்து தங்களைக் கவர்ந்த, நெகிழ வைத்த பகுதியை நூறு வார்த்தைகளுக்குள் எழுதவும்.

விதிமுறைகள்:

  • விடைகளைத் தேட கீழ்காணும் சுட்டியைப் பயன்படுத்துங்கள் http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/28-thozargal.html
  • www.darulislamfamily.com அல்லது www.satyamargam.com தளங்களில் உள்ள ‘தேடுக / Search’ வசதியைப் பயன்படுத்தியும் விடைகளைத் தேடலாம்.
  • அனைத்து வினாக்களுக்கும் தெளிவான விடைகளை எழுதுங்கள். ஒவ்வொரு வினாவிலும் உள்ள உப கேள்விகளுக்கும் விடுபடாமல் விடையளிக்க வேண்டும்.
  • விடைகளை “ரமளான் 1438 – தோழர்கள் போட்டி” என்று subject line-இல் குறிப்பிட்டு, admin@darulislamfamily.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
  • இன்ஷா அல்லாஹ் ஜுன் 30, 2017, மக்கா நேரம் 11:59 PM வரை அவகாசம். அதன் பிறகு வரும் விடைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
  • விடைகளின் தொகுப்பும் வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்பும் எங்களது தளத்தில் பின்னர் வெளியாகும்.
  • இப்போட்டியில் www.darulislamfamily.com-இன் முடிவே இறுதியானது.

நமது அறிவு அபிவிருத்தி அடையவும் அவனுக்கு உவப்பானதாகவும் அமைய அல்லாஹ் உதவி புரிவானாக.

Related Articles

Leave a Comment