துண்டிலக்கியம்

by நூருத்தீன்

தக்காளி

cilantro (not parsley)

இஞ்சி. பூண்டு பேஸ்ட்டு

மறக்காம yogurt

என்ற SMS தகவலுக்கு அடிபணிந்து, வாங்கிக் கொண்டு நுழைந்தால், ‘அப்படியே அந்தத் துணிகளை வாஷர்லேருந்து எடுத்து ட்ரையர்ல போட்டுருங்க’ என்ற அன்புக் கட்டளை. செவிசாய்த்துவிட்டு அப்பாடா என்று உட்கார்ந்து, ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்

பிரண்ட்டர் இங்க் தீர்ந்த கவலை, ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டிய புத்தகங்களுக்கு கடைசி நாள் என்று வாரிசுகளின் தலையாயப் பிரச்சினைகளுக்கு வழிவகை செய்ய வேண்டிய பொறுப்பு. அனைத்தையும் முடித்துவிட்டு நிமிர்ந்தால், மண்டையில் மை தீர்ந்து போகிறது.

முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கும்போதே துண்டிலக்கியம் இவ்வளவு படுத்துகிறதே, பேயோனுக்கு மட்டும் எப்படி முடிகிறது? இதில் தானும் சம்சாரி என்கிறார்.

புளுகுகிறார் மனுசன்.

Related Articles

Leave a Comment