புகைத்து மகிழ், கெட்டுத் தொலை. எதற்கு குற்றவுணர்வு என்று marijuana என்ற போதை வஸ்துவை அனுமதித்துச் சட்டமாக்கிவிட்டது வாஷிங்டன் மாநிலம். அரசின் கையாலாகத்தனம் ஒழிய வேண்டுமெனில் சட்டமியற்றி தப்பை ஏற்றுக் கொண்டால் போச்சு என்ற நியாயம் விரைவில் உலகமயமாகத்தான் போகிறது. அதுவல்ல என் கவலை.
காலை 8 மணிக்கு நகரின் மையப்பகுதியான downtown பகுதியைக் கடக்கும்போதே பல் துலக்கியும் துலக்காமலும் ‘தம் மாரோ தம்’ என்று அமர்ந்திருக்கும் யுவன்கள் யுவதிகளைக் காணும்போதுதான் கவலையாகிறது. தெருவிலேயே தூங்கி எழுந்து தம்! பெற்றோர்கள் தேடமாட்டார்களோ? அது பெத்த மனசா? கல்லா?
பொறுப்பற்ற பெருசுகளின் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்காவின் இளசுகள்!
ஒபாமாவிடம் சொல்லி அவர்கள் வீடுகளின்மீது வான்வெளித் தாக்குதல் நடத்தச் சொல்ல வேண்டும்.