ஆசிரியர் | நூருத்தீன் |
பதிப்பகம் | கீழை பதிப்பகம் |
பதிப்பு | 2018 |
வடிவம் | Paperback |
பக்கம் | 40 |
விலை | ₹ 30.00 |
புதிய தலைமுறை மனிதன் காலை கண்விழிப்பது முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும்தான். அலுவலகப் பணிகளிடையேயும் சமூகத்துக்கு ஏதாவது கருத்தைச் சொல்லும் பணியை அவன் மறப்பதில்லை. நள்ளிரவு வரை அவனது இந்த முகநூல் போராட்டம் தொடர்கிறது.
அறைக்குள் பேசவேண்டியதை அவையில் பேசத் தொடங்கினான். தன்னைச் சுற்றி ஒளிவட்டம் அமைத்தான். அந்தரங்கங்களில் புகுந்தான். எள்ளி நகையாடினான். ஏகத்துக்கும் வசனம் பேசினான். இடம்,பொருள், ஏவல் பாராது சாட்டையைச் சுழற்றினான். பொறுப்பற்ற ஒரு பதிவு சமூகத்தில் எத்தகைய பெரும் குழப்பத்தையெல்லாம் ஏற்படுத்தி விடுகிறது.
இது தகவல் தொழில் நுட்பத்தின் காலம். இங்கு உரையாடல் மிக அவசியம். ஆனால் அதற்கான ஒழுங்கை அவன் அறியவில்லை. இந்த ஒழுங்குகளைக் கற்றுத் தருவதற்கு எவரும் இல்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டு நண்பர் நூருத்தீன் தகவல் பரிமாற்றத்தின் ஒழுங்குமுறைகளை மிக எளிமையாகவும், எள்ளலாகவும் சொல்கிறார். எழுத்தாளர் சுஜாதாவின் நடையைப் போன்று மிக எளிதாகவும், வலிமையாகவும் நூருத்தீன் இந்த நூலை வடித்திருக்கிறார்.